

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட் டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் மதுரை மத்தி, மதுரை கிழக்கு தவிர மற்ற 8 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. தற்போது அதிமுக 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
மதுரை மேற்கில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை தெற்கில் தற்போதைய எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணன், மதுரை கிழக்கில் முன்னாள் எம்பி ஆர்.கோபாலகிருஷ்ணன், திருப்பரங் குன்றத்தில் வடக்குத் தொகுதி எம்எல்ஏ விவி.ராஜன்செல்லப்பா, திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மேலூரில் தற்போதைய எம்எல்ஏ பி.பெரியபுள்ளான், சோழவந்தானில் தற்போதைய எம்எல்ஏ கே.மாணிக்கம், உசிலம்பட்டியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் பி.அய்யப்பன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மதுரை வடக்குத் தொகுதி கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட் டுள்ளது. இங்கு பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம.னிவாசன் போட்டியிட இருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
அதேபோன்று, மதுரை மத்திய தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப் படவில்லை. இத்தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்படலாம் எனவும், அங்கு வேட் பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.கே.ராஜேந்திரன் நிறுத்தப்படலாம் எனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர். இத்தொகுதியில், கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ம.ஜெயபாலை திமுக சார்பில் போட்டியிட்ட பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தோற்கடித்தார்.
உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதிக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு வழங் கவில்லை. அவருக்குப் பதிலாக மேற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.அய்யப் பனுக்கு ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது. இவர் திருமங்கலம் தொகுதியிலுள்ள செக்கானூரணியைச் சேர்ந்தவர். தற் போது மாவட்ட கவுன்சிலராக உள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளர்
மதுரை கிழக்குத் தொகுதியில் முன் னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் மாநகராட்சி துணை மேயராக இருந் தவர். 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆனார். தற்போது அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினராகவும், தேர்தல் பிரிவு இணைச் செயலாளராகவும் உள்ளார். இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதர வாளர். அவர் அதிமுகவில் இருந்து விலகி தர்மயுத்தம் நடத்தியபோது முதல் எம்பியாக அவருக்கு ஆதரவு தந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் வடக்கு தொகுதியைக் கேட்டபோதிலும் கிழக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற 8 எம்எல்ஏக்களில் 5 பேர் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். மதுரை வடக்குத் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ள விவி.ராஜன் செல்லப்பா, தொகுதி மாறி இந்த முறை திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுகிறார். அதிமுகவில் வடக்குத் தொகுதியைக் கேட்ட முன்னாள் எம்எல்ஏ ராஜாங்கம், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்எஸ்.பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மதுரை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 8 வேட்பாளர்களில் உசிலம்பட்டி தொகு திக்கு அறிவித்த அய்யப்பனைத் தவிர மற்றவர்கள் ஏற்கெனவே எம்பி, எம்எல்ஏக்களாக பதவி வகித்தவர்கள். புதியவர்களுக்குப் பெரியளவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மதுரை மாநகரில் உள்ள தொகுதி களில் போட்டியிட விருப்பமனு கொடுத்த முன்னாள் மண்டலத் தலைவர் சாலைமுத்து, கிரம்மர் சுரேஷ், வெற்றிவேல், சோலைராஜா உள்ளிட்ட பலருக்குப் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கவில்லை. அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோர் மாவட்டச் செயலாளர்களாக இருந்தும் தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் தனது ஆதரவாளர்கள் ஒருவருக்குக் கூட ‘சீட்’ பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
பழைய முகங்கள்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஏற் கெனவே எம்எல்ஏ-க்களாக உள்ள தனது ஆதரவாளரான எஸ்.எஸ்.சரவணனுக்கு ‘சீட்’ பெற்றுக் கொடுத்ததுடன் அய்யப்பனுக்கு புதிதாக உசிலம்பட்டி தொகுதிக்கு ‘சீட்’ பெற்றுக் கொடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.
இவர்களில் எஸ்.எஸ்.சரவணனுக்கு தனது மாவட்டத்தை தாண்டி அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாவட்டச் செய லாளராக இருக்கும் மதுரை தெற்கிலும், பெரியபுள்ளானுக்கு மதுரை கிழக்கு மாவட்டத்திலும் ‘சீட்’ பெற்றுக் கொடுத்துள்ளார். எனினும், புறநகரில் அவரது ஆதரவாளர்கள் தமிழரசன், இளங்கோவன் உள்ளிட்ட சிலர் ‘சீட்’ கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள் ளனர்.
மதுரை மாவட்ட அதிமுகவில் உசி லம்பட்டி வேட்பாளர் அய்யப்பனை தவிர மற்ற அனைவரும் பழைய முகங் களே என்பது குறிப்பிடத்தக்கது.