

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.
கடலூர் மாவட்டத்திலும் வெள்ள நீர் வடியாததால், மீட்புப் பணிகளி இன்னும் முடியாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தகவல்.
மாநிலக் கல்லூரி தேர்வு ரத்து:
சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று நடைபெற வேண்டிய தேர்வுகள் வரும் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் என கல்லூரி முதல்வர் அறிவிப்பு.
சென்னை பல்கலை., தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும்:
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இன்று வழக்கம்போல் அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என துணை வேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார்.