தேர்தலில் மூன்று அமைச்சர்களுக்கு வாய்ப்பளிக்காத அதிமுக

அமைச்சர்கள் வளர்மதி, நிலோபர் கபில், பாஸ்கரன்.
அமைச்சர்கள் வளர்மதி, நிலோபர் கபில், பாஸ்கரன்.
Updated on
1 min read

அதிமுகவில் அமைச்சர்கள் நிலோபர் கபில், பாஸ்கரன், வளர்மதி ஆகியோருக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.

தமிழகத்தில் வரும் ஏப். 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 12 முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ளது. வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக இன்று (மார்ச் 10) 171 தொகுதிகளுக்கான 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதனை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக வெளியிட்டனர்.

ஏற்கெனவே 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டிருந்தது. அதில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் வேட்பாளர்களாக இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், இன்று வெளியிட்ட பட்டியலில், கதர் கிராமத் தொழில்கள் நல வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகிய மூவருக்கும் மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. மேலும், தமிழக அமைச்சரவையில் தற்போதுள்ள 23 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

அமைச்சர் பாண்டியராஜன் - ஆவடி

அமைச்சர் பென்ஜமின் - மதுரவாயல்

அமைச்சர் கே.சி.வீரமணி - ஜோலார்பேட்டை

அமைச்சர் கே.பி.அன்பழகன் - பாலக்கோடு

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் - ஆரணி

அமைச்சர் சரோஜா - ராசிபுரம் (தனி)

அமைச்சர் தங்கமணி - குமாரபாளையம்

அமைச்சர் கே.சி.கருப்பணன் - பவானி

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் - கோபிச்செட்டிப்பாளையம்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி - தொண்டாமுத்தூர்

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் - உடுமலைப்பேட்டை

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் - திண்டுக்கல்

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் - கரூர்

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் - திருச்சி கிழக்கு

அமைச்சர் எம்.சி.சம்பத் - கடலூர்

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் - வேதாரண்யம்

அமைச்சர் காமராஜ் - நன்னிலம்

அமைச்சர் சி.விஜயபாஸ்கர் - விராலிமலை

அமைச்சர் செல்லூர் ராஜூ - மதுரை மேற்கு

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் - திருமங்கலம்

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி - ராஜபாளையம்

அமைச்சர் கடம்பூர் ராஜூ - கோவில்பட்டி

அமைச்சர் ராஜலெட்சுமி - சங்கரன்கோவில் (தனி)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in