Published : 10 Mar 2021 03:53 PM
Last Updated : 10 Mar 2021 03:53 PM

சென்னையில் 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டி? 5 கேட்டதில் 2 மட்டுமே ஒதுக்கீடு

சென்னை

சென்னையில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 5 தொகுதிகள் கேட்ட நிலையில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் சென்னையில் மட்டும் சேப்பாக்கம், மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி, துறைமுகம் உள்ளிட்ட தொகுதிகளும், ராசிபுரம், கோவை (தெற்கு), நெல்லை, பரமக்குடி, திருவாரூர், கிணத்துக்கடவு, காஞ்சிபுரம், காரைக்குடி, ராஜபாளையம் உள்ளிட்ட பல தொகுதிகளைக் கேட்டதாகத் தகவல் வெளியானது. இதில் பல தொகுதிகள் தற்போது அதிமுக வென்று வலுவாக உள்ள தொகுதிகள் ஆகும்.

இதில் சேப்பாக்கத்தில் குஷ்புவும், மயிலாப்பூரில் கரு.நாகராஜன் அல்லது கே.டி.ராகவன், ஆயிரம் விளக்கில் கு.க.செல்வம், துறைமுகத்தில் வினோஜ் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியானது. இதில் தற்போது பாஜகவுக்கு சென்னையில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பாஜகவுக்கு துறைமுகம் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகள் மட்டுமே வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குஷ்பு போட்டியிடுவார் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், பாஜகவினர் இறங்கி வேலை பார்த்த சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பாஜக போட்டியிடும் தொகுதிகள் என கீழ்க்கண்ட தொகுதிகள் இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

1. திருவண்ணாமலை, 2. நாகர்கோவில், 3. குளச்சல், 4. விளவங்கோடு, 5. ராமநாதபுரம், 6. மொடக்குறிச்சி, 7. துறைமுகம், 8. ஆயிரம் விளக்கு, 9. திருக்கோவிலூர், 10. திட்டக்குடி (தனி), 11. கோவை தெற்கு, 12. விருதுநகர், 13. அரவக்குறிச்சி, 14. திருவாரூர், 15. உதகமண்டலம், 16. திருநெல்வேலி, 17. தளி, 18. காரைக்குடி, 19. தாராபுரம் (தனி), 20. மதுரை வடக்கு ஆகிய தொகுதிகள் எனத் தகவல் ஓடுகிறது. இது அதிகாரபூர்வ தொகுதிகள் அல்ல. மாற்றம் வர வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x