ஸ்டாலின் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கனவு காண்கிறார்: குஷ்பு ட்வீட்

ஸ்டாலின் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கனவு காண்கிறார்: குஷ்பு ட்வீட்
Updated on
1 min read

திமுக தலைவர் ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் அறிவிப்பை பாஜகவைச் சேர்ந்த குஷ்பு கிண்டல் செய்துள்ளார்.

தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் திமுகவின் பிரம்மாண்ட தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் மார்ச் 7-ம் தேதி திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்த 7 உறுதிமொழிகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், "அடுத்த 10 ஆண்டுகளுக்கான லட்சியப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டேன்.

பொருளாதாரம் - வேளாண்மை - நீர்வளம் - கல்வி-சுகாதாரம் - நகர்ப்புற வளர்ச்சி - ஊரக உட்கட்டமைப்பு- சமூகநீதி துறைகளில் கவனம் செலுத்தி, தமிழகம் தலை நிமிரும். 7 உறுதிமொழிகளை லட்சக்கணக்கானோர் முன்னிலையில் ஏற்றேன்!" என்று பதிவிட்டு இருந்தார்.

இந்தப் பதிவினை மேற்கொளிட்டு பாஜகவைச் சேர்ந்த குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"காப்பி பேஸ்ட் செய்வதெல்லாம் பழைய கதை. கட் செய்து பேஸ்ட் செய்வது தான் புதிய முறை. திமுக தலைவர் ஸ்டாலின் புதிய முறையைத் தான் பின்பற்றுகிறார். இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் ஏற்கெனவே நம் பிரதமர் நரேந்திர மோடியால் நிறைவேற்றப்பட்டு விட்டன. ஸ்டாலின் கனவு காணும் அனைத்தையும் பாஜக கடந்த ஆறு ஆண்டுகளில் வழங்கியுள்ளது. அவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கனவு காண்கிறார்”

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in