Published : 10 Mar 2021 03:11 AM
Last Updated : 10 Mar 2021 03:11 AM

12 அரசியல் கட்சிகளுக்கு பொது சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம் உட்பட 12 தமிழக அரசியல் கட்சிகளுக்கு பொது சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் குறைந்தபட்சம் 5 சதவீதம், அதாவது 12 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பொது சின்னம்பெற முடியும். பல்வேறு கட்சிகள்234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக கூறி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து பொது சின்னம் பெற்று வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மனிதநேய மக்கள் கட்சி - கத்தரிக்கோல், ஜனசங்கம் பார்ட்டி ஆஃப் இந்தியா - வெண்டைக்காய், வஞ்சித் பகுஜன் ஆகாதி - கிராமபோன், மக்கள் ராஜ்யம் கட்சி - தலையணை, நம் இந்தியா நாம் இந்தியர் கட்சி - அன்னாசிப்பழம், பாரத சேவைக் கட்சி - ரப்பர் ஸ்டாம்ப், நேஷனல் டெமாக்ரசி பார்ட்டி ஆஃப் சவுத் இந்தியா - குளிர்சாதன பெட்டி, மக்கள் திலகம் முன்னேற்றக் கழகம் - பலூன், அவர்மகாத்மா நேஷனல் பார்ட்டி - கேஸ் ஸ்டவ், மை இந்தியா பார்ட்டி - சிசிடிவி கேமரா, பாரத மக்கள் கட்சி - ஹெல்மெட், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் - டியூப் லைட் என பொது சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x