நலிந்த தொழிலாளர்களுக்கு அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதி

நலிந்த தொழிலாளர்களுக்கு அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதி
Updated on
1 min read

அதிமுக சார்பில் அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்த 23 நலிந்த தொழி லாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ.23 லட்சம் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

மே தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு அதிமுக சார்பில் நிதி வழங்கப்படுகிறது.

இந்தாண்டு, 104 தொழிலாளர் களுக்கு ரூ. ஒரு லட்சம் வீதம், ரூ.1 கோடியே 4 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதன்படி, நேற்று மதுரையில் நடந்த விழாவில், ஓ.பன்னீர்செல் வம், செல்லூர் கே.ராஜூ. எஸ்.சுந்தர்ராஜ், எஸ்.பி.சண்முகநாதன், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆர்.சின்னசாமி உள்ளிட்டோர், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 23 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம் வீதம் ரூ.23 லட்சத்தை வழங்கினர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in