Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?- மாநில எல்லைகளில் போலீஸார் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை

கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்தால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோ சித்து முடிவு எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள் ளூர், திருப்பூர், தஞ்சாவூர், காஞ்சி புரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகமாகக் காணப்படு கிறது.

இதையடுத்து ஒரேதெருவில் 3 நபர்களுக்கும் மேல் தொற்று கண்டறியப்பட்டால், அத்தெருவை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறி விப்பது, வெளிநாடு, வெளிமாநிலங் களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் போன்ற நடவடிக்கைகள் மீண்டும் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன.

இ-பாஸ் கட்டாயம்

மேலும், இ-பாஸ் நடைமுறை யில் புதிய வழிகாட்டு நெறிமுறை கள் வெளியிடப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள் ளது. இதனால் அம்மாநில எல்லைப் பகுதிகளில் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா எல்லைகளிலும் போலீஸார் குவிக் கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சி யாக இன்று இரவு முதல் வாகன சோதனை மீண்டும் தீவிரப்படுத் தப்படவுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை இந்த சோதனையை தொடர அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுதவிர வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் கட்டாயம் பரி சோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே தொற்று அதி கரித்து வரும் நிலையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் ஊரடங்கு தேவையில்லை. ஆனால், தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருந்தால், தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்கள் அல்லது தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஊரடங்கு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதனிடையே அரசியல் கட்சிகள் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் கரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதில்லை. இது தொற்று மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் தெரிவித்திருக்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் மாநகராட்சி உத்தரவின்படி தெருவில் 3 பேர் பாதிக்கப்பட்டிருந்தால் மீண்டும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக ஆணை யர் கோ.பிரகாஷ் கூறும்போது, "தடுப்பு பகுதிகளை ஏற்படுத்து வது, முன்னெச்சரிக்கை நட வடிக்கைதான். சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில், 3 பேருக்கு மேல் தொற்று உள்ள தெருக்கள் 10 தான் உள்ளன. அத னால் அப்பகுதிகளில் தடுப்பு ஏற் படுத்துவதை கண்டு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x