

அதிகபட்சமாக 10 தொகுதிகளும், குறைந்தபட் சம் 5 தொகுதிகளும் தர வேண்டும் என்று பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக பாமக புதுவை மாநில அமைப்பாளர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில்பாஜக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இருப்பதுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என்ஆர் காங்கிரஸ் இக்கூட்டணியில் இடம் பெறுவது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பாமகதொகுதி பங்கீடு குறித்து தனது பேச்சுவார்த் தையை நேற்று தொடங்கியது. புதுச்சேரியில் உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து பாமக அமைப்பாளர் தன் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் பாமகவுக்கு 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். குறைந்தபட்சம் காரைக்காலில் ஒரு தொகுதியும், புதுச்சேரியில் 4 தொகுதிகளும் என 5 தொகுதி கள் ஒதுக்க வேண்டும். அதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ரங்கசாமி வர வேண்டும்.அவர் வந்தால் தான் காங்கிரஸ் கட்சியை அழிக்க முடியும். அதேநேரத்தில் ரங்கசாமிக்காக தேசிய ஜனநாயக கூட்டணி காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று குறிப்பிட்டார்.