செம்மண் குவாரி வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பொன்முடி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

செம்மண் குவாரி வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பொன்முடி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி
Updated on
1 min read

வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரி யில் அளவுக்கு அதிகமாக செம் மண் எடுத்ததாக பொன்முடி எம்எல்ஏ, கவுதமசிகாமணி எம்பி, ராஜமகேந்திரன், லோகநாதன், சதானந்தன், கோதகுமார், ஜெயச் சந்திரன், கோபிநாத் ஆகிய 8 பேர் மீதான கடந்த 2012-ம் ஆண்டில் பதியப்பட்ட வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

லோகநாதன் உடல்நலக்குறை வால் இறந்து விட்டார். பொன் முடி எம்எல்ஏ, கவுதம சிகாமணி எம்பி, ராஜமகேந்திரன், ஜெயச் சந்திரன் ஆகியோர் தங் களை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி மனுத்தாக்கல் செய் தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதமசிகாமணி எம்பி,சதானந்தன், கோதகுமார், ஜெயச் சந்திரன், கோபிநாத் ஆகிய 5 பேர் ஆஜராயினர்.

பொன்முடி எம்எல்ஏ, ராஜமகேந்திரன் ஆகிய 2 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மனுத் தாக்கல் செய்தார். நீதிபதி இளவழ கன், வழக்கின் முக்கியத்துவம் கருதி 4 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தார். தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணையை ஏப்ரல் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in