

கடலூர் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற பாடுபடுவோம் என்று அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.
கடலூர் அருகே உள்ள பாதிரிகுப்பத்தில் உள்ள அதிமுக அலு வலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அதிமுக கடலூர் மத்திய மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத் முன்னிலையில் அதிமுக வில் இணைந்தனர்.
இதில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 500 பேர் அக் கட்சியின் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் பிரதீப் தலைமை யில் அதிமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்த அனைவ ருக்கும் சால்வை அணிவித்து வரவேற்று அமைச்சர் சம்பத் பேசியது:
அதிமுகவில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானா லும் எந்த பதவிக்கும் வரலாம். புதியவர்கள், பழையவர்கள் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் அனைத்து தொகு திகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற செய்ய வேண்டும்.
அதற்கு அனைவரும் முழு முயற்சியோடு செயல்பட வேண் டும். தொண்டர்கள் நினைத்தால் மட்டுமே முழு வெற்றியை அடைய முடியும். குறுகிய காலம் மட்டுமே இருப்பதால் 24 மணி நேரமும் தேர்தல் பணியாற்றிட வேண்டும்.
முதல்வர் பழனிசாமி தலைமை யில் மீண்டும் ஆட்சி அமைக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடு படுவோம். அடுத்தும் நமதுஆட்சி அமைந்தால் தமிழகத்தில்அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று தெரிவித்தார். கடலூர் நகர செயலாளர் குமரன், மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் தங்கமணி, கடலூர் தெற்கு ஒன்றிய செயலா ளர் பழனிச்சாமி, நகரத் துணைச் செயலாளர் கந்தன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ஏ.ஜி.தஷ்ணா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.