

சட்டமன்றத்தேர்தலையொட்டி, வேட்பாளர்கள் வரவு, செலவு கணக்கு தொடர்பாக அனைத்துக் கட்சி பிரமுகர்களுடனான ஆலோச னைக் கூட்டம், விழுப்புரத்தில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல்அலுவலரும் ஆட்சியருமான அண்ணாதுரை பேசியது: வேட்பாளர்கள் செலவு செய்யும் 30 வகையான பொருட்களுக்கு இந்தியதேர்தல் ஆணையம் விலைப்பட் டியலை நிர்ணயித்துள்ளது. இந்தவிவரம் உங்களுக்கு வழங்கப்பட் டுள்ளது. தேர்தல் செலவின பார்வையாளர் வரும் 12-ம் தேதி வர உள்ளார்.
அன்றைய தினம் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. வேட் பாளருடன் 2 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 100 மீட்டர் வரை 2 கார்களுக்கு அனு மதி வழங்கப்படும். அனைத்து அனுமதி நடைமுறைகளும் இணையதளம் மூலம் மட்டுமே வழங்கப் படும். அரசியல் கட்சி பிரமுகர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் பேசிய திமுகமாவட்ட செயலாளர் புகழேந்தி, “தேர்தல் ஆணையம் 80 வயதிற்குமேற்பட்டவர்கள், மாற்றுத்திறனா ளிகள் தபால் வாக்கு அளிக்கலாம் என்று அறிவித்தள்ளது. தற்போது, வாக்குச்சாவடி அலுவலர்கள், தபால் வாக்கு விருப்ப மனுவை எடுத்துச் சென்று, உதவித்தொகை தருகிறோம் என்று தவறான தகவல்களை கூறி கையொப்பம் பெற்று வருகின்றனர். இந்த முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் 10 வகையான துறையினருக்கு தபால் வாக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநர்களுக்கு தபால் வாக்கு இருக்கும்போது, தமிழகத்தில் அரசுப் பேருந்து டிரைவர்களுக்கு ஏன் வழங்கப் படவில்லை. அவர்களும் இரவு, பகலாக பணியில் இருக்கிறார்கள்’‘ என்று கூறினார்.
தொடர்ந்து ஆட்சியர் பேசுகையில், “முதியோர், மாற்றுத்திற னாளிகளுக்கு தபால்வாக்கு விண்ணப்பங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.
அப்படி வழங்கும் பட்சத்தில் வேட்பாளர்கள், அவர்க ளின் முகவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸார், அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வீட்டிற்கே நேரடியாக சென்று அந்த விண்ணப்பங்களை வழங்கி,எப்படி வாக்களிக்க வேண்டும் என்று விவரிக்கப்படும். இதில், எந்தவித முறைகேடுகளும் நடைபெறாது. அதேபோல், 10 வகையான துறையினருக்கு தபால்வாக்கு அறிவிக் கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு, வாக்குப் பதிவின் முந்தைய 3 நாட் களுக்கு முன்பு, தொகுதியில் மையப்பகுதியில் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.