கரோனா தடுப்பு வழிமுறைகளுடன் கூடிய மாதிரி வாக்குச்சாவடி: காரைக்கால் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

மாதிரி வாக்குச்சாவடியை திறந்து வைத்துப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா.
மாதிரி வாக்குச்சாவடியை திறந்து வைத்துப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா.
Updated on
1 min read

காரைக்காலில் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடியை மாவட்ட ஆட்சியர் இன்று திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

காரைக்கால் மாவட்டத் தேர்தல் துறையும், 'ஸ்வீப்' அமைப்பும் இணைந்து, கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடியை அமைத்துள்ளன.

இதனை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன் சர்மா இன்று (மார்ச் 08) திறந்து வைத்துப் பார்வையிட்டார். வாக்காளர்களுக்குத் தேவையான வசதிகள், கரோனா பரவலைத் தடுக்கும் வகையிலான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்று ஆய்வு செய்தார்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல், வாக்காளர்கள் சானிடைசர் மூலம் மூலம் கைகளைச் சுத்தம் செய்து கொள்ளுதல், உடல் வெப்பநிலையைப் பரிசோதித்தல், கையுறை, முகக்கவசம் வழங்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகளுடன் இந்த வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத் துணைத் தேர்தல் அதிகாரி எஸ்.பாஸ்கரன், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எம்.ஆதர்ஷ், எஸ்.சுபாஷ், 'ஸ்வீப்' அதிகாரி ஷெர்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in