வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு ரூ.600 கோடி செலவு: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் கோரிக்கை

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு ரூ.600 கோடி செலவு: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் கோரிக்கை
Updated on
1 min read

வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக ரூ.600 கோடி செலவு செய்தது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறி யிருப்பதாவது

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு தமிழகம் முழுவதும் 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது பருவம் தவறி பெய்த மழை அல்ல. இந்த பருவத்தில் மழைபெய்யும் என்பதை உணர்ந்து தேவையான தடுப்பு நடவடிக்கை களை எடுத்திருக்க வேண்டும்.

எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் தமிழகத்தின் உள்கட்டமைப்பும், அத்தியாவசிய சேவைகளும் நிலை குலைந்துள்ளன. சென்னையில் சமீபத்தில் போடப்பட்ட சாலைகள் கூட குண்டும்குழியுமாக காட்சி அளிக்கின்றன.

மழையால் மிக மோசமாக பாதிக் கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை பார்வையிட் டேன். மக்கள் தங்கள் துயரங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் பல கிராமங் கள் வெள்ளத்தால் சூழப்பட் டுள்ளன. மின் இணைப்பு துண் டிக்கப்பட்டதால் எங்கும் இருள் சூழ்ந்துள்ளது. அனைத்தையும் இழந்து விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். அதிமுக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதை காண முடிந்தது.

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு இதுவரை ரூ.600 கோடி செலவிட்டிருப்பதாக சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், பணிகள் நடை பெற்றதாக தெரியவில்லை. எனவே, இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு தேவையான அளவு மருத்துவக் குழுக்களையும், மருந்துகளையும் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in