

தொடர் மழையால், சென் னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் நீர் இருப்பு அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது. இதன் மூலம் சென் னையை மிரட்டி வந்த குடிநீர் தட்டுப்பாடு அபாயம் சற்று நீங்கி யுள்ளது. மழை தொடரும்பட்சத்தில் இந்த ஏரிகளின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண் டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் மாவட் டத்திலும் கடந்த 6-ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் வறண் டுக் கிடந்த ஏரிகள், குளங்கள், ஆறுகளில் நீர் நிறைந்து காணப் படுகின்றன.
குறிப்பாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம் பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு கணிசமாக அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது. கடந்த மாதம் 20-ம் தேதி நிலவரப்படி குடிநீர் தரும் ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11057 மில்லியன் கனஅடியில் நீர் இருந்தது 324 மில்லியன் கனஅடி மட்டுமே. தற்போது பெய்த மழை யால் மொத்த ஏரிகளின் நீர் இருப்பு நேற்றைய நிலவரப்படி 1720 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதன்படி 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு நேற்றைய நிலவரப்படி 204 மில்லியன் கன அடி. அதே போல், 881 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நேற்றைய நீர் இருப்பு 160 மில்லியன் கன அடியாக இருந்தது. அதேபோல், 3,300 மில்லியன் கன அடி கொள் ளளவு கொண்ட புழல் ஏரியின் இருப்போ 471 மில்லியன் கன அடி. அதே போல், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நேற்றைய நீர் இருப்பு 885 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் சென்னைக்கு குடி நீர் விநியோகிப்பதில் சிறிது காலத்துக்கு சிரமம் இருக்காது. மேலும் சென்னையை மிரட்டி வந்த குடிநீர் தட்டுப்பாடுக்கு தற்காலி கமாக முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளதாக குடிநீர் வழங்கல் வாரிய வட்டாரங்கள் தெரி விக்கின்றன.