

பாஜகவில் அண்மையில் இணைந்த கராத்தே தியாகராஜன் சென்னை கோயம்பேட்டில் உள்ளஅக்கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் 20 பேரவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். 25 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வி அடையும். மேயர், துணை முதல்வர் பதவிகளை வகித்தபோதே செயல்திட்டங்களை போடாத மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிடும் செயல்திட்டத்தை எப்படி செயல்படுத்துவார். கொளத்தூரில் நிச்சயம் அவர் தோல்வி அடைவார்.
நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவுசெய்யும். கடந்த 2016 தேர்தலில்காங்கிரஸ் நின்ற தொகுதிகளில்திமுகவினர் சரியாக பணியாற்றவில்லை. திமுக - காங்கிரஸ் பொருந்தாத கூட்டணி. நடிகர் ரஜினிகாந்த்ஒரு ஆன்மிகவாதி, தேசியவாதி. பிரதமர் மோடி, அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் தமிழகத்தின் முக்கியபாஜக தலைவர்கள் அவருடன் தொடர்பில் இருக்கின்றனர். எனவே, இம்முறை நிச்சயம் பாஜக - அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு கூறினார்.