

பாடகர் கோவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
மக்கள் கலை இலக்கியக் கழக மையக் குழுவைச் சேர்ந்தவர் சிவதாஸ் என்ற கோவனை சைபர் கிரைம் போலீஸார் தேசத்துரோகம் மற்றும் அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிடுதல் ஆகிய பிரிவு களில் வழக்கு பதிவு செய்து நேற்று முன் தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவனை உடனடி யாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், கருத்துரிமைக்கு எதிராக அரசு செயல்படுவதைக் கண்டித்தும் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல்வேறு கட்சியின ரைத் திரட்டி 2-ம் தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மக்கள் அதிகாரம் தலைமைக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், மகஇக வழக் கறிஞர் மீனாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.
கோவன்