Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

சேலம் சின்னதிருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

சேலம் சின்னதிருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அடுத்தபடம்: இதில், பங்கேற்று பெருமாளை வழிபட்ட திரளான பக்தர்கள். படங்கள்:எஸ்.குரு பிரசாத்

சேலம்

சேலம் சின்னதிருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.

இதையொட்டி, நேற்று முன்தினம் நிச்சயதார்த்தத்துடன் திருக்கல்யாண உற்ஸவம் தொடங்கியது. நேற்று  அலமேலு மங்கை தாயார் மற்றும்  வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மேலும், கோயில் முழுவதும் மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காலை 9 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள்  அலமேலு மங்கை தாயாருக்கும்,  வெங்கடேச பெருமாளுக்கும் பக்தர்களின் கோவிந்தா முழக்கத்துடன் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. தொடர்ந்து பெருமாள், அலமேலு தாயாருடன் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

இன்று (8-ம் தேதி) மாலை 5 மணிக்கு தெப்ப உற்ஸவமும், நாளை (9-ம் தேதி) மாலை 5 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x