

புதுச்சேரி பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்துகளை கேட்டு வருகிறது.
புதுச்சேரியில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கூறிய கருத்தின் அடிப் படையில், அனைவரின் கருத்து களை கேட்டறிந்து தேர்தல் அறிக்கையை தயார் செய்ய பாஜக முடிவு எடுத்தது. அதை யடுத்து மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர், புதுச்சேரி பாஜக மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பாஜக மாநிலத் தலை வர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் இணைந்து புதிய பேருந்து நிலையத்தில் தேர்தல் அறிக் கைக்கான கருத்து சேகரிப்பு பெட்டி அனுப்பும் பணி தொடங் கப்பட்டது.
இதுபற்றி நிர்வாகிகள் கூறு கையில், “தேர்தல் அறிக்கைகள் அரசியல் கட்சிகளால் தயாரிக் கப்பட்டது அந்த காலம். மக் களே நமக்கான தேர்தல் அறிக்கையை உருவாக்கவே ஆலோசனை பெட்டி வைத்து கருத்துகளை சேகரிக்கிறோம்” என்று குறிப்பிட்டனர்.
மேலும், வாகனத்தின் மூலம் அனைத்து தொகுதிகளுக்கும் அனுப்பி மக்கள் கருத்துகள் சேகரிக்கப்பட்டு தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்தனர்.