Published : 08 Mar 2021 03:58 AM
Last Updated : 08 Mar 2021 03:58 AM

மு.க.ஸ்டாலினின் தொடர் பிரச்சாரத்தால் தமிழக மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது: திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பெருமிதம்

மக்கள் கிராம சபை, உங்கள் தொகுதியில் ஸ்டாலின், ஸ்டாலின் தான் வர்றாரு. விடியல் தர போறாரு என பல நிகழ்ச்சிகள் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற தலைப்பில் திருச்சி அருகே சிறுகனூரில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தனது வரவேற்புரையில் பேசியது:

1996-ம் ஆண்டு நடைபெற்ற திமுக மாநாட்டில் கூட்ட நெரிச லில் சிக்கியதால், திமுக தலைவ ராக இருந்த கருணாநிதி கூட்ட மேடைக்கு வேனில் வர முடி யாமல் இருசக்கர வாகனத்தில் வந்து மாநாட்டை தொடங்கி வைத்தார். அதேபோல இன்றும் காவல்துறை செய்த சிறு தவ றால், மு.க.ஸ்டாலின் வேனை பாதியிலேயே நிறுத்திவிட்டு காரில் இங்கு வந்துள்ளார். மக்கள் கிராம சபை, உங்கள் தொகுதியில் ஸ்டாலின், ஸ்டாலின் தான் வர்றாரு. விடியல் தர போறாரு என்ற பல நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளார் என்றார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசியது:

கருணாநிதிக்கு பிறகு இந்த இயக்கத்தை கட்டுப்பாடுடன் கட்டிக்காக்கும் வல்லமை, அரசியல் தெளிவு, மக்களை ஈர்க்கும் சக்தி மு.க.ஸ்டாலினிடம் உள்ளது. கருணாநிதி மறைந்த 18 மாதத்துக்குள் கட்சியைக் கட்டுக் கோப்பாக கொண்டு வந்த பெருமை மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. எதிரணியில் இருந்தவர்களையும் தன் அணிக்கு கொண்டு வந்தவர். மக்களவைத் தேர்தலில் வெற்றியை நிலை நாட்டினார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதுமையான திட்டத்தை பெரும்பாலான தொகுதிகளில் நடத்தி வருகிறார். 18 மாதத்தில் அவர் செய்த புதுமை, அரசியலில் மாற்றாரை வியக்க வைத்திருக்கிறது.பெரியார் இல்லாத குறையை, அண்ணா இல்லாத சோகத்தை, கருணாநிதி இல்லாத வருத்தத்தை போக்கியுள்ளார். எங்கள் வாழ்நாளையும் சேர்த்து வாழ்ந்து தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கட்டிக்காத்து வாழ வைக்க வேண்டும் என்றார்.

முன்னதாக,மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத், சுப.வீரபாண்டியன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர் ராஜன், பாலசுப்பிரமணிய தீட்சிதர், மருத்துவர் எழிலன், வே.மதிமாறன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோரும் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

மு.க.ஸ்டாலின் உறுதிமொழி

அனைத்து உரிமைகளையும் கொண்டதாக தமிழகத்தை மாற் றிக் காட்டுவோம். மக்களை பிளவு படுத்தும் எவரையும் கூட்டாக எதிர் நின்று தோற்கடிப்போம். எல்லோ ருக்கும் எல்லாம் என்ற அரசை நடத்திக் காட்டுவோம். சட்டம், ஒழுங்கை உறுதியோடு காப்பாற் றுவோம். சட்ட மீறல்களையும், குற்றச் சம்பவங்களையும் இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம். அமைதியான வாழ்க்கைக்கு அடித் தளம் அமைப்போம். 100 சதவீதம் வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுப்போம். இந்த உறுதிமொழிகளை எந்நாளும் காப்போம்” என இந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x