காலாவதியான 13 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: சென்னைக்கு அனுப்பி வைப்பு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கிடங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்ட காலாவதியான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கிடங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்ட காலாவதியான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

வேலூரில் காலாவதியான 13 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கடந்த 2004-ம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, இந்தியதேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன. வேலூர் மாவட்டத்தில் நாடாளு மன்றம் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்ட 13 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்படுத்தும் காலம் முடிவடைந்து விட்டது.இவை அனைத்தும் வேலூர் மாநகராட்சி அலுவலகத்திலும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்று காலை அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில், மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டி ருந்த 2,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,310 கட்டுப்பாட்டு கருவிகள் சென்னையில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டன.

அதேபோல, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 6,113 கட்டுப்பாட்டு கருவிகள்சென்னை பெல் நிறுவனத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. 13 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னைக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் காலாவதியாகி விட்டதால், பெல் நிறுவனத்தில் வைத்து அதில் பதிவாகியுள்ள அனைத்து விவரங் களும் அழிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in