

பாஜக சார்பில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நேற்று முன் தினம் நடைபெற்றது.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “தமிழகத்தில் பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்” என்றார். எல்.முருகனுக்கு ஓபிசி அணி மாநில துணைத் தலைவர் ஏழுமலை நினைவுப் பரிசு வழங்கினார்.
இதில், கூட்டமைப்பு செயலாளர் ரமேஷ், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பார்வையாளர் ராஜேந்திரன், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவர் வெங்கடேசன், போளூர் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் செல்வேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் அலமேலு, மாவட்ட நெசவாளர் அணி துணைத் தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன், மாநில எஸ்சி அணி செயற்குழு உறுப்பினர் சம்பத், ஓபிசி அணி மாவட்டத் தலைவர் நித்தியானந்தம், மாவட்ட துணைத் தலைவர் பாண்டுரங்கன், திருவண்ணாமலை மாவட்ட தூய்மை பாரத ஒருங்கிணைப் பாளர் னிவாசன், மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் ராஜலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.