Published : 08 Mar 2021 03:58 AM
Last Updated : 08 Mar 2021 03:58 AM

தேர்தல் தொடர்பான புகார்களை சி-விஜில் செயலியில் தெரிவிக்கலாம்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல்

தேர்தல் விதிமீறல்கள் தொடர் பான புகார்களை பொதுமக்கள் ‘சி-விஜில்’ என்ற ஆப் மூலம் தெரி விக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர் களிடம் திருப்பத்தூர் மாவட்ட மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவை தொகுதிகளில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், அனைத்து தொகுதி களிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண் காணிக்க மாவட்டம் முழுவதும் 41 பறக்கும்படையினர், தேர்தல் நிலை கண்காணிப்புக்குழுவினர் கண் காணிப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், பறக்கும்படையினர், காவல் துறையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, பொதுமக்கள் அவசியமில்லாமல் பணம் மற்றும் பொருட்களை வெளியே எடுத்துச் செல்லவேண்டாம். அப்படி செல்வதாக இருந்தால் அதற்கான ஆவணங்களை பொதுமக்கள் உடன் எடுத்துச்செல்ல வேண்டும். தேர்தல் அதிகாரிகள் நடத்தும் வாகன சோதனைகள் அனைத்தும் விடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது.

தேர்தல் விதிமீறல்கள் தொடர் பான புகார்களை பொதுமக்கள் தங்களது செல்போன் வழியாக தேர்தல் பிரிவுக்கு தெரிவிக்கலாம். இதற்கான இந்திய தேர்தல் ஆணையம் ‘சி-விஜில்’ என்ற புதிய ஆப்பை உருவாக்கியுள்ளது.

பொதுமக்கள் தங்களது செல்போனில் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் ‘சி-விஜில்’ என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் தேர்தலில் பணம், பரிசுகள், கூப்பன்கள், மதுபானம் விநியோகம், தடை காலத்தில் தேர்தல் பிரச்சாரம், அனுமதி யில்லாமல் சுவர் விளம்பரம், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பிறமும் ஒலிபெருக்கி பயன்பாடு உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை ‘சி-விஜில்’ ஆப் வாயிலாக ஆடியோ, வீடியோ வடிவிலான புகார்களை மாவட்ட தேர்தல் பிரிவுக்கு தெரிவிக்கலாம்.

அவ்வாறு பெறப்படும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், புகார் தரும் நபர்களின் பெயர் மற்றும் விவரம் பாதுகாக்க தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு உத்தரவிப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை சி-விஜில் ஆப்பில் தெரிவிக்கலாம்.

தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான விண்ணப்பம் 12டி படிவத்தை அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர்களிடம் இருந்து வரும் 12-ம் தேதியில் இருந்து 16-ம் தேதிக்குள் பெற்று அதை பூர்த்தி செய்து அன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதேநேரத்தில், வயது முதிர்ச்சியடைந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவு மையத் துக்கு நேரில் வந்து வாக்களிக்க சிரமப்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட தேர்தல் பிரிவு அலுவலர், அரசியல் கட்சி முகவர் களுடன் வாக்காளரின் வீட்டுக்கே நேரில் சென்று தபால் வாக்குகளை பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வாக்காளர் அடையாள அட்டைகள் இல்லாதவர்கள் அரசு சார்பில் வழங்கப்பட்ட புகைப் படத்துடன் கூடிய 11 அடையாள அட்டைகளை பயன்படுத்தி தேர்தல் நாளன்று தங்களது வாக்குகளை செலுத்தலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x