Last Updated : 07 Mar, 2021 05:09 PM

 

Published : 07 Mar 2021 05:09 PM
Last Updated : 07 Mar 2021 05:09 PM

காங்கிரஸுக்குக் குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம் சொல்லிப் பலனில்லை: ப.சிதம்பரம் பேச்சு

”காங்கிரஸுக்குக் குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம் சொல்லிப் பலனில்லை’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி கீழச்சிவல்பட்டியில் காங்கிரஸ் சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் ப.சிதம்பரம் பேசியதாவது:

”காங்கிரஸுக்கு இந்தத் தேர்தலில் கடந்த முறையை விட குறைவான தொகுதிகளே ஒதுக்கியுள்ளனர். இதற்கு திமுகவைக் குற்றம் சொல்லிப் பலனில்லை. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் நமக்கு 63 தொகுதிகளை ஒதுக்கியதில் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றோம். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் 40 தொகுதிகளை ஒதுக்கியதில் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றோம். இதனால் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் வழங்கினால் வெற்றி பெறுவார்களோ என்ற கவலை திமுகவிற்குத் தோன்றியது.

தமிழகம் முழுவதும் வெற்று பெறுவதை வைத்துதான் கூட்டணிக் கட்சிகளின் பலத்தைக் கணிப்பார்கள். வெற்றி பெற வேண்டுமென்றால் நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். குறிக்கோள் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். குறியே இல்லாமல் அம்பு எய்தால் எங்கே போய் பாயும்.

காங்கிரஸ் கட்சிக்குக் குறிக்கோள் இருக்கிறது. தேர்தலுக்கு தேர்தல் மாறுமே தவிர, கண்டிப்பாக குறிக்கோள் இருக்கும். நம்முடைய குறிக்கோள், கருத்துகளை ஏற்பவர்கள்தான் ஆட்சிக்கு வர வேண்டும். நச்சு இயக்கமான பாஜகவைக் காலூன்ற விடக் கூடாது. தமிழகம் வந்த அமித் ஷாவிற்கு வானதி சீனிவாசன் 2 தலையாட்டி பொம்மைகளை வழங்கினார். அதைப் பார்க்கும்போது ஓபிஎஸ், இபிஎஸ் நினைவுக்கு வருகிறது.

1885-ம் ஆண்டு சுதந்திரக் கொள்கை அடிப்படையில் தொடங்கப்பட்டது காங்கிரஸ். பாஜக வெள்ளையர்களுக்கு வெண்சாமரம் வீசியது. தமிழ் தொன்மை வாய்ந்த மொழி. தமிழர்களின் கலாச்சாரம், மொழி, பண்பாட்டைச் சிதைக்கப் பார்க்கிறது பாஜக. பேராண்மை மிகுந்த தலைவர்களும், ஆளுமை மிகுந்த தலைவர்களும் தற்போது கிடையாது. அதிமுக தங்களது கொள்கை, கோட்பாடுகளை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டது. பாஜகவை 20 தொகுதிகளிலும் வெற்றி பெறவிடக் கூடாது”.

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x