

போரூர் ஏரி நிரம்பியதைத் தொடர்ந்து சாலையை துண்டித்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. இதனால், மவுலிவாக்கம்- மாங்காடு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போரூர் ஏரி, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கிய மானது. சுமார் 822 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, பல்வேறு ஆக்கிரமிப்புகளால் தற்போது 200 ஏக்கராக சுருங்கி உள்ளது. தற்போது, 12 அடி உயரம் கொண்ட போரூர் ஏரியின் முழு கொள்ளளவு 46 மில்லியன் கன அடி. திருவள்ளூர் மாவட்டத்தில் பொழிந்து வரும் கனமழையால், போரூர் ஏரியை சுற்றியுள்ள நீர் நிலைகள் நிரம்பி, வரத்துக்கால்வாய்கள் மூலம் போரூர் ஏரிக்கு அதிகளவில் மழை நீர் வருகிறது.
மதனந்தபுரம், விக்னேஷ்வரா நகர் பகுதியில் கரை பலவீனமாக இருப்பதால், அதனை பலப்படுத் தும் பணியில் கடந்த சில நாட் களுக்கு முன் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். 8 ஆயிரம் மணல் மூட்டைகள் மூலம் போரூர் ஏரியின் கரை பகுதி பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 15-ம் தேதி மாலை ஏரி முழுகொள்ளளவை எட்டியது. நேற்று முன் தினம் பெய்த மழையால் ஏரிக்கு வினா டிக்கு 400 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, ஏரியிலிருந்து உபரி நீரை வெளி யேற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், போரூர் ஏரியி லிருந்து உபரி நீர் வெளியேறு வதற்கு, உரிய வழியில்லை.
இதனால், மவுலிவாக்கம் மாங் காடு சாலையில், பரணிபுத்தூர் பாலம் அருகில் சாலை துண்டிக் கப்பட்டது. அதன்வழியாக உபரி நீரை பொதுப்பணித்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். இதன்படி, வினாடிக்கு 400 கனஅடி நீர் வெளியேறி வருகிறது.
இதனால், மவுலிவாக்கம் மாங்காடு இடையே போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது. அந்த வழியில் சென்று வந்த வாகனங்கள் அய்யப்பன்தாங்கல் வழியாக சுற்றிச் சென்று வருகின்றன.