

உலக உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் மகளிர் தின சிறப்புக் கொண்டாட்டம் இணையவழியில் நாளை (மார்ச் 8) நடைபெறவுள்ளது.
உலகம் முழுவதும் மார்ச் 8-ம்தேதி உழைக்கும் மகளிர் தினமாககொண்டாடப்படுகிறது. 1917-ம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யப் புரட்சிக்கு முந்தைய பெண்களின் புரட்சிநடைபெற்ற நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் சார்பில் நாளைமாலை 4 மணிக்கு இணையவழிகொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
விழாவில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, எழுத்தாளர் ஜா.தீபா இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர். மகளிர் தின கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், பெண்கள் அடைய வேண்டிய இலக்கு குறித்தும் இவர்கள் உரையாற்றுகின்றனர். இந்த நிகழ்ச்சியை ‘மை இந்தியா எஸ்.ஜி.’ இணைந்து வழங்குகிறது.
இணைய வழியில் நடக்கும்இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான இணைப்பு: https://bit.ly/3v2h9gn