

வாக்காளர் தகவல் சீட்டை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மேலும், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஊரகவேலை உறுதித் திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி,அஞ்சலக கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், மத்திய தொழிலாளர் துறையால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு தொடர்பான ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம்,பான் அட்டை, தேசிய மக்கள்பதிவேடு அமைப்பு வழங்கிய ஸ்மார்ட் கார்டு, கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய புத்தகம், மத்திய மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை அடையாள ஆவணமாக காட்டி வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.