Published : 29 Nov 2015 11:22 AM
Last Updated : 29 Nov 2015 11:22 AM

போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு: மகளிர் ஆணையத் தலைவர் வேதனை

பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் வேதனை தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்ய வைத்திய பார்மஸியில், விவேகானந்தா சேவா கேந்திரம் அமைப்பின் சார்பில் மகளிர் சங்கமம் என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள லலிதா குமாரமங்கலம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, ‘தேசிய மகளிர் ஆணையம் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.சமீபத்தில் கூட காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மாநில மகளிர் ஆணை யங்களிடமும் பேசி ஆலோசனை களைப் பெறுகிறோம். ஆனால் பெண்களுக்கு எதிரான குற் றங்கள் மீது கடுமையான நடவடிக் கைகள் எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரையை மட்டுமே கொடுக்க முடியும்.

அதை மத்திய, மாநில அரசுகளே நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். அனைத் தையும்விட ஒவ்வொருவருக்கும் சுயகட்டுப்பாடு தேவை.

பெண்கள் மீதான வன்முறை களை சமூக வலைதளங்களும், ஊடகங்களும் வெளிப்படுத்துவ தால் அதிகளவில் தெரிய வரு கின்றன. காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கான பதிலும் கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x