இளைஞர்களின் வாக்குகளை பெற மத்திய இணை அமைச்சர் அறிவுரை

விருதுநகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பணிக் குழு கூட்டத்தில் பேசினார் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்.
விருதுநகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பணிக் குழு கூட்டத்தில் பேசினார் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்.
Updated on
1 min read

மத்திய அரசின் திட்டங்களைக் கூறி இளைஞர்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்று மத்திய போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறினார்.

ராஜபாளையம், விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற பாஜக தேர்தல் பணிக் குழு கூட்டத்தில் மத்திய போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பேசியதாவது:

இளம் வாக்காளர்கள் மற்றும் முதல் வாக்காளர்களிடம் பாஜக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகளைப் பெற வேண்டும். பாஜகவின் திட்டங்களை பொதுமக்களிடமும் விளக்க வேண்டும். கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் பாஜக சிறந்த வளர்ச்சி பெற்றுள்ளதை அறிய முடிகிறது.

இந்தத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும். நாம் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த முடியும். இந்த தேர்தலில் பாஜக, அதிமுக வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றிபெறச் செய்ய கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in