மழையால் சேதம் அடைந்த பொருட்களுக்கு காப்பீடு பெறுவது எப்படி?- இன்சூரன்ஸ் அதிகாரி விளக்கம்

மழையால் சேதம் அடைந்த பொருட்களுக்கு காப்பீடு பெறுவது எப்படி?- இன்சூரன்ஸ் அதிகாரி விளக்கம்
Updated on
1 min read

மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்தால் அவற்றுக்கான காப்பீடு இழப்பு பெறுவது எப்படி என்பது குறித்து இன்சூரன்ஸ் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் பெய்த கனமழைக்கு பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அத்துடன், வீட்டில் இருந்த மின்சாரம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. இவ்வாறு சேதம் அடைந்த பொருட்களுக்கு இழப்பீடு எவ்வாறு பெறலாம் என்பது குறித்து, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகாரி பி.தினகரன் கூறியதாவது:

வீட்டு உபயோகப் பொருட்க ளான தொலைக்காட்சி, குளிர் சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் அவன், மேஜைக் கணினி, ஏசி, லேப்டாப் ஆகியவற் றுக்கு காப்பீடு கிடைக்கிறது.

இதைத் தவிர, பிற வீட்டுப் பொருட்களான ஆடைகள், திரைச் சீலைகள், சேர், டேபிள்கள் மற்றும் தரைவிரிப்பு போன்றவற்றிற்கு காப்பீடு கிடைக்கிறது. மேலும், தங்க நகைகள், பிற நகைகள் மற்றும் விலை உயர்ந்த கற்கள் போன்றவற்றிற்கும் காப்பீடு கிடைக் கிறது. நாம் எடுக்கும் காப்பீட்டுத் தொகைக்கு ஏற்ப பிரீமியம் வசூலிக்கப்படும். உதாரணமாக, ரூ.10 லட்சத்துக்கு காப்பீடு எடுத்தால் ஆண்டொன்றிற்கு தோராயமாக ரூ.7 ஆயிரம் பிரீமியம் வசூலிக்கப்படும்.

மேலும், இழப்பீடு கோரும் போது பாலிசி காலாவதி ஆகியிருக்கக் கூடாது. வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்பட்ட 24 மணி நேரத்தில் இருந்து அதிகபட்சமாக ஒருவாரத்துக்குள் சம்மந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். இழப்பீடு கோரும்போது நாங்கள் கேட்கும் ஆவணங்களை சரியாக பாலிசிதாரர் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் அவர்கள் கோரிய இழப்பீட்டுத் தொகையை முழுமையாக நாங்கள் வழங்கி விடுவோம். அதேபோல், வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் ஏதேனும் இயற்கை சீற்றத்தினால் சேதம் அடைந்த பிறகு அவற்றுக்கு பாலிசி எடுத்து இழப்பீடு கோர முடியாது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in