Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

முக்கியத்துவம் பெறும் ஆறு!

அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 6 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், எண்கள் தொடர்பான சென்டிமென்டும், சமூகம் சார்ந்த சில விஷயங்களும் அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமான எண்களை வழக்கமாக அனைத்து விஷயங்களிலும் பயன்படுத்துவார்கள்.

இந்நிலையில் அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் 6 பேர் பெயர்கள் இடம்பெற்றிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சமூகம் சார்ந்த வகையில், எடப்பாடி- கொங்கு வெள்ளாள கவுண்டர், போடிநாயக்கனூர்- முக்குலத்தோர், ராயபுரம்- மீனவர், விழுப்புரம்- வன்னியர், ஸ்ரீ வைகுண்டம்- நாடார், நிலக்கோட்டை (தனி) - ஆதிதிராவிடர் என்ற அடிப்படையில், அனைவருக்கும் அதிமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற வகையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும், விரைவில் சிறுபான்மையினரை உள்ளடக்கிய அடுத்த பட்டியல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x