காவல் துறை உயர் அதிகாரி மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் விசாகா குழு அதிகாரி மாற்றம்

காவல் துறை உயர் அதிகாரி மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் விசாகா குழு அதிகாரி மாற்றம்
Updated on
1 min read

டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில் அமைக்கப்பட்ட விசாகா குழுவில் அதிகாரி மாற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் சமீபத்தில் பிரச்சாரத்துக்கு சென்றபோது முதல்வரின் பாதுகாப்புக்காக சென்ற டிஜிபி அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் அங்கு பணியில் இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தமிழக டிஜிபி திரிபாதி, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோரிடம் அந்த பெண் அதிகாரி கடந்த 23-ம் தேதி புகார் அளித்தார். அவரது புகார் அடிப்படையில் விசாரணை செய்ய விசாகா கமிட்டிஅமைத்து உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் 24-ம் தேதி உத்தரவிட்டார்.

தமிழக அரசின் திட்டம், வளர்ச்சிதுறை கூடுதல் தலைமைச் செயலர் ஜெய ரகுநந்தன் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. இதில்தமிழக காவல் துறையின் தலைமையிட கூடுதல் டிஜிபி சீமா அகர்வால்,நிர்வாகப் பிரிவு ஐஜி ஏ.அருண்,காஞ்சிபுரம் டிஐஜி சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலக தலைமை நிர்வாக அலுவலர் வி.கே.ரமேஷ்பாபு, சர்வதேச நீதி அமைப்பின் நிர்வாகி லோரெட்டா ஜோனா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஐ.ஜி. அருண் நீண்ட விடுப்பில் சென்றதால், விசாகா கமிட்டியில் அவருக்கு பதிலாக ஐஜி நிர்மல் குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in