ராமேசுவரம் அருகே வேதாளை கடற்கரையில் 952 ஆயிரம் கிலோ கடல் அட்டை பறிமுதல்

ராமேசுவரம் அருகே வேதாளை கடற்கரையில் 952 ஆயிரம் கிலோ கடல் அட்டை பறிமுதல்
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் தடை செய்யப்பட்ட 952 கிலோ கடல் அட்டைகளை குற்றப்பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வேதாளை கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்குக்கு வந்த ரகசியத் தகவலையடுத்து, ராமேசுவரம் உதவி காவல் கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாச் தலைமையில் வேதாளை கடற்பகுதியில் போலீஸார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் மாலை வேதாளை தெற்குத் தெருவைச் சேர்ந்த அல்லாப்பிச்சை என்பவரது தென்னந்தோப்பில் சோதனையிட்டபோது 7 மூட்டைகளில் 258 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள், 10 பேரல்களில் பதப்படுத்தப்படாத 694 கிலோ கடல் அட்டைகள் என ரூ.20 லட்சம் மதிப்பிலான 952 கிலோ கடல் அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ராமேசுவரத்தைச் சேர்ந்த வில்லாயுதம், வேதாளையைச் சேர்ந்த அல்லாப் பிச்சை, செய்யது காதர் ஹுசைன், ஆவுல், ரமலான் செல்வம், ஹம்துல் நிசார், மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த இம்ரான் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து மண்டபம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in