காங். சார்பில் போட்டியிட 126 விருப்ப மனுக்கள்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி மனு அளிக்கவில்லை

காங். சார்பில் போட்டியிட 126 விருப்ப மனுக்கள்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி மனு அளிக்கவில்லை
Updated on
1 min read

புதுச்சேரி காங்கிரஸ் சார்பில்தேர்தலில் போட்டியிடுவோரிட மிருந்து கடந்த 27-ம் தேதி முதல் மார்ச் 5-ம் தேதி வரை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை விருப்ப மனு பெறப்படும் எனபுதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தெரிவித்தார். விருப்ப மனுக்களை பெறுவதற்கான காலம் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி 23, காரைக்கால் 5, மாஹே, ஏனாமில் தலா 1 என 30 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்படும் நிலையில் இதுவரை 126 விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். இதில் திருபுவனை தொகுதியில் போட்டியிட அதிக விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, எம்எல்ஏக்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி உள்ளிட்டோரும் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் காரைக்கால் வடக்கு தொகுதியில் போட்டியிட தனது விருப்ப மனுவை அளித்துள்ளார்.

ஆனால் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கமலக்கண்ணன், ஷாஜகான், துணை சபாநாயகர் பாலன் மற்றும் எம்எல்ஏக்கள் சிலர் நேற்று வரை விருப்ப மனு அளிக்கவில்லை.

இருப்பினும் ராஜ்பவன் தொகுதியில் முன்னாள் முதல்வர்நாராயணசாமிக்காக பிரதீஷ் என்பவர் விருப்ப மனு அளித்துள்ளார். நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் 8-ம் தேதிக்குள் தங்க ளுடைய விருப்ப மனுக்களை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in