

தனிச்சின்னத்தில் போட்டியிட்டு தனித்தன்மையுடன் செயல்பட்டால் அரசியல் கட்சியாக வளர முடியும் என தமாகா மாநில பொதுச் செய லர் விடியல் சேகர் தெரிவித்தார்.
`இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
மாநிலக் கட்சிகளைப் பின் னுக்குத்தள்ளி பாஜக வளரும் நிலையில், உங்களுக்குப் பாது காப்பு இருக்குமா?
ஜிகே.வாசன் தலைமையில் தனித்தன்மையுடன் செயல் படுகிறோம். அதிமுக-பாஜக மெகா கூட்டணியில் இடம்பெற் றுள்ளோம். பாஜகவின் ஆக்கிர மிப்பு என்றெல்லாம் ஒன்று மில்லை.
இத்தேர்தலில் எத்தனை தொகுதிகள் எதிர்பார்க்கிறீர்கள்?
குறைந்த பட்சம் 15 தொகுதி கள் வேண்டும் எனத் தொண்டர்கள், நிர்வாகிகள் விரும்புகிறோம். ஜிகே.வாசனிடம் வலியுறுத்தி உள்ளோம். பரவலாகப் பெரும் பாலான இடங்களில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தனித் தன்மையுடன் செயல்பட்டால் மட்டுமே, அரசியல் கட்சியாக வளர முடியும். முன்னாள் எம்எல்ஏக்கள் 30 பேரும், 10 எம்பிக்களும் ஜி.கே.வாசனை ஏற்றுச்செயல்படுகின்றனர்.
தமாகாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் ?
காங்கிரஸ் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறியது. தமிழர்களின் பிரச் சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் துரோகம் இழைத்தது. இதுபோன்ற காரணத்தால் மீண்டும் தமாகா உருவானது. தேர் தலுக்குப் பிறகு தமாகா வளர்ச்சி பெறும்.
பெட்ரோல், காஸ் விலை உயர்வால் உங்களது பிரச்சார வியூகம் எப்படி அமையும்?
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மக்களின் எதிர்ப்பு நியாயமானது. விலையைக் குறைக்கத் தொடர்ந்து குரல் கொடுப்போம். இல்லையெனில் போராடவும் தயங்க மாட்டோம்.