100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி தி.மலை மாவட்டத்தில் நரிக்குறவர்கள் நடனமாடி விழிப்புணர்வு

தி.மலையில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற  100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பிரச்சாத்தில் நடனமாடிய பெண்.
தி.மலையில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பிரச்சாத்தில் நடனமாடிய பெண்.
Updated on
1 min read

நரிக்குறவர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் நடைபெற்றது.

தி.மலை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அப்போது அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான விவிபாட் இயந்திரத்தின் செயல்பாடு குறித்து விளக் கினார்.

மேலும், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பாடல் ஒலிபரப் பியபோது நரிக்குறவர்கள் நடனமாடினர்.

பின்னர் ஆட்சியர் பேசும்போது, “தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது, 18 வயது நிறைவு பெற்று வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, நரிக்குறவர் கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, அடி அண்ணாமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வேங்கிக்கால் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது அவர், சாய்வு தளம், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா, மாவட்ட சமூக நல அலுவலர் கந்தன், தி.மலை நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை ஆட்சியர் (பயிற்சி) அஜிதாபேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in