தமிழகத்தில் அரசு வேலைக்காக 63 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை தகவல்

தமிழகத்தில் அரசு வேலைக்காக 63 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் அரசு வேலைக்காக 63 லட்சத்துக்கு 63 ஆயிரம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

10-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், பிஇ, பிடெக்,பிஎஸ்சி விவசாயம், எம்பிபிஎஸ், பிஎல் உள்ளிட்ட தொழிற்படிப்பு தகுதிகள், முதுகலை பட்டப் படிப்புத் தகுதிகளை சென்னை மற்றும் மதுரையில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்ய வேண்டும்.

இந்நிலையில், கடந்த பிப்.28 வரை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள மொத்த பதிவுதாரர்களின் எண்ணிக்கை 63 லட்சத்து 63 ஆயிரத்து 122. அதில் 24 வயது முதல் 35 வரையுள்ளவர்கள் 22 லட்சத்து 78 ஆயிரத்து 107 பேர். 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 10 லட்சத்து 89 ஆயிரத்து 786 பேர்.

ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 983 இடைநிலை ஆசிரியர்களும், பிஎட் முடித்த 2 லட்சத்து 97 ஆயிரத்து 362 பட்டதாரிகளும், பிஎட் முடித்த2 லட்சத்து 18 ஆயிரத்து 324 முதுகலை பட்டதாரிகளும் உள்ளனர்.

மேலும், 2 லட்சத்து 8 ஆயிரத்து 556 பிஇ, பிடெக் பட்டதாரிகளும், 2 லட்சத்து 18 ஆயிரத்து 411 எம்இ, எம்டெக் பட்டதாரிகளும் அரசு வேலைக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in