Published : 04 Mar 2021 07:56 PM
Last Updated : 04 Mar 2021 07:56 PM

வாழ சுலபமான நகரங்கள் பட்டியல்: மத்திய அரசு சர்வேயில் மதுரைக்கு 22-வது இடம்; முதலிடம் பெற்றது இந்தூர்

மதுரை

வாழ சுலபமான நகரங்கள் (ease of living) பட்டியல் பற்றிய மத்திய அரசின் சர்வேயில் மதுரை இந்தியாவிலேயே 22-வது இடத்தை பிடித்துள்ளது.

ஆண்டுதோறும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (Ministry of Housing and Urban Affairs) வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்கள் வாழ்வாதாரங்களைக் கொண்டு நாடு முழுவதும் முக்கிய நகரங்களை பட்டியலிட்டு, அதில் வாழ சுலபமான நகரங்கள் (ease of living) குறித்து சர்வே நடத்தும்.

கடந்த 2018ம் ஆண்டு நாடு முழுவதும் 111 நகரங்களில் நடந்த கணக்கெடுப்பில் மதுரை 24வது இடத்தைப்பிடித்தது.

2019ம் ஆண்டு பல்வேறு காரணங்களில் இந்த சர்வே நடத்தப்படவில்லை. 2020ம் ஆண்டு சர்வே நடந்தது. இந்த சர்வேயில் 10 லட்சத்திற்கு மேலான மக்கள் தொகை நகரங்கள், 10 லட்சத்திற்கும் குறைவான நகரங்கள் பட்டியல் அடிப்படையில் தனித்தனியாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் சர்வே மேற்கொண்டது.

இந்த சர்வேயில் தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகள் ஆர்வமாகப் பங்கேற்று தங்கள் நகரங்களில் உள்ள மக்கள் வாழ்வதற்கான சிறப்பு அம்சங்களை பட்டியலிட்டு சர்வேக்கு அனுப்பி வைத்தன. இந்த சர்வே முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘2018ம் ஆண்டு சர்வேயில் 111 நகரங்களில் சர்வே நடந்தது. இதில், மதுரை 24வது இடம் பெற்றது. 2020ம் ஆண்டு சர்வே நடந்தது. 10 லட்சத்திற்கும் அதிகமான நகரங்கள் பட்டியில் மதுரை இடம்பெற்றது.

மதுரையைப் போன்று நாடு முழுவதும் 51 நகரங்கள் இந்த சர்வேயில் இடம்பெற்றன. இந்த சர்வேயில் மதுரை 22வது இடம் பெற்றது.

இந்தியளவில் இந்தூர் நகரம் முதலிடமும், சூரத் நகர் 2வது இடமும், போபால் மூன்றாவது இடமும், சென்னை 18வது இடமும், கோவை 12வது இடமும், மதுரை 22வது இடத்தையும் பெற்றது, ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x