Published : 04 Mar 2021 11:56 AM
Last Updated : 04 Mar 2021 11:56 AM

வைகோ, ஓபிஎஸ், குஷ்பு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

கோவிட் தடுப்பூசி போடும் பணி மும்மூரமாக நடந்து வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணைய நோய் உள்ளவர்கள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, குஷ்பு, ஓபிஎஸ் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்தியா முழுவதும் கரோனா கடந்த ஆண்டு பிப்ரவரியில் பரவ தொடங்கிய நிலையில் உச்சமாக தொடங்கியதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24 ம் தேதி இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலானது. கரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. மறுபுறம் கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியும் உலகம் முழுவதும் தொடங்கியது.

10 மாதங்களுக்கும் மேலாக கரோனா ஊரடங்கு நீடித்த நிலையில் கடந்த டிசம்பர் இறுதியில் பெரிதும் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்தியாவில் தடுப்பூசியும் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டு கோவாக்சின், கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் அமலுக்கு வந்தது. முதற்கட்டமாக மருத்துவ களப்பணியாளர்கள் முன்களப்பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேலுள்ள இணைய நோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரதமர், குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர் மற்றும் பல மாநில முதல்வர்கள் முக்கிய வி.ஐபிக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் உயர் அதிகாரிகள், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணை முதல்வர் ஓபிஎஸ், குஷ்பு உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்து பதிவிட்டுள்ள குஷ்பு தான் தினமும் ஆயிரக்கணக்கான பேரை சந்திக்கும் சூழ்நிலையில் குடும்பத்தை கவனிக்கும் சூழ்நிலையில், எனக்குள்ள பிரச்சினகள் காரணமாக தடுப்பூசி போட்டுகொண்டேன். எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x