Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM

தேர்தல் பாதுகாப்பு குறித்து - காவல்துறை அதிகாரிகளுடன் சத்யபிரத சாஹு ஆலோசனை

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதிநடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையிலான தேர்தல் குழு மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரைதேர்தல் பாதுகாப்பு பணிக்காக330 கம்பெனி துணை ராணுவத்தினர் கோரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அடுத்தடுத்துவரும் துணை ராணுவப்படையினரை பிரித்தனுப்புவது, தமிழககாவல் துறையினரை பணியமர்த்துவது ஆகியவற்றுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

சத்யபிரத சாஹு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநிலகாவல்துறைக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி ஜி.வெங்கடேஷ்வரன், மத்திய தொழில் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையடுத்து, நேற்று மாலைகரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்துவது தொடர்பாக, சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து மாவட்டதேர்தல் அதிகாரிகள் காணொலியில் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமும் சத்யபிரத சாஹு தலைமையில் நடைபெற்றது.

கரோனா பரிசோதனை

கூட்டத்தில், தேர்தல் பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை, தடுப்பூசி போடுதல், சமூக இடைவெளியை பின்பற்றி வாக்குப்பதிவு நடத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x