

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “பொதுத் துறைஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பில் தேர்தல் அதிகாரிகள், உதவிதேர்தல் அதிகாரிகளின் பெயர், முகவரி, கைபேசி எண், வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் முகவரிபோன்ற விவரங்கள் இடம்பெறவில்லை” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், “தமிழக அரசின் பொதுத்துறைஇணையதளத்தில் 230 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், உதவிதேர்தல் அதிகாரிகள் ஆகியோரின்தொடர்பு எண்கள், இ - மெயில் முகவரிகள் உள்ளிட்ட விவரங்கள்ஏற்கெனவே வெளியிடப்பட் டுள்ளன. எஞ்சிய 4 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கான தேர்தல் அதிகாரிகள் குறித்த விவரங்கள் இன்று (மார்ச் 3) வெளியிடப்படும். உத்திரமேரூர் தொகுதிக்கான விவரம் ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கைமுடித்து வைத்தனர்.