

அனைத்து ரேஷன் கடைகளிலும் மலிவு விலை துவரம் பருப்பை விற்பனை செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமாகா மாவட்டத் தலைவர்கள் மற்றும் சிறுபான்மையினர் அணி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் வாசன் கூறியதாவது:
பருப்பு, வெங்காயம், காய்கறி கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனை சமாளிக்க கூட்டுறவு கடைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 110-க்கு விற்பனை செய் யப்பட்டு வருகிறது. இதனால் நகர்ப் புற மக்கள் மட்டுமே பயன்பெறு கின்றனர். கிராம மக்களும் பயன் பெறும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் மலிவு விலை துவரம் பருப்பை விற்பனை செய்ய வேண்டும்.
சீன பட்டாசுகள் விற்பனையில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் களுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி அள வுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதிக நச்சை வெளிப்படுத் தும் ஆபத்தான சீன பட்டாசுகள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் தீபாவளி பண்டிகைக்கு முன்பு விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் நலக் கூட்டணியில் இணையுமாறு எனக்கு அழைப்பு வந்துள்ளது. 234 தொகுதிகளுக் கான எனது பயணம் முடிந்ததும் கூட்டணி குறித்து முடிவு செய் வோம். இவ்வாறு வாசன் கூறினார்.