Published : 03 Mar 2021 12:18 PM
Last Updated : 03 Mar 2021 12:18 PM

பாமக தேர்தல் அறிக்கை; நாளை மறுநாள் சென்னையில் வெளியீடு: ஜி.கே.மணி அறிவிப்பு

பாமக தேர்தல் அறிக்கை மார்ச் 5 அன்று வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப். 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால், திமுக, அதிமுக உள்ளிட்ட முதன்மைக் கட்சிகள் மட்டுமின்றி, அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலையில் இறங்கியுள்ளன.

கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, தொகுதிப் பங்கீடு, பிரச்சார வேலைகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பது, போட்டியிடும் தொகுதிகள் - வேட்பாளர்களை இறுதி செய்வது ஆகிய பணிகளைக் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கூட்டணியில் உள்ள பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், தேர்தல் பணிகளில் இறங்கியுள்ள பாமக, வரும் 5-ம் தேதி சென்னையில் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது.

இது தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி இன்று (மார்ச் 3) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை மறுநாள் (மார்ச் 5) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

நான், பாமகவின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாமக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்குவார்கள்".

இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x