

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து அச்சகஉரிமையாளர்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதே போல்காவல்துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது . இக்கூட்டங்களில் விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அண்ணாதுரை பேசிய தாவது:
சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சாதகமாக நடந்து கொள்ளக்கூடாது. அரசியல் கட்சியினர் நடத்தும் பிரச்சார நிகழ்ச்சி, ஊர்வலம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு நியாயமான முறையில் அனுமதி வழங்க வேண்டும். ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் அரசியல் கட்சியினர் நடத்தும் ஊர்வலங்கள் நேர், எதிராக நடத்துவது போன்ற நிலை இருக்கக்கூடாது. சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாமல் அமைதியான முறையில் தேர்தல் நடத்த போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடி களாக 50, மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக 33 என 83 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சுவர் விளம்பரம் இருக்கக்கூடாது. அதனை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும். கிராமப்புற பகுதிகளில் மட்டும் சுவர் விளம்பரம் வரைய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் எஸ்பி ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், ஏடிஎஸ்பி தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மிகவும் பதற்றம் நிறைந்தiவைகளாக 33 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.