Published : 03 Mar 2021 03:26 AM
Last Updated : 03 Mar 2021 03:26 AM

கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ரங்கசாமி முக்கிய ஆலோசனை

ஆன்மிகப் பயணத்தை முடித்துக் கொண்டு புதுச்சேரி திரும்பிய என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, தனியார் ஹோட்டலில் நேற்றிரவு தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி

நடக்கிறது. இந்த வாரத்திலேயே கூட்டணி, தொகுதி பங்கீடை முடித்து பிரச்சாரத்துக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

புதுவையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்ஆர் காங்கிரஸூடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை பாஜகவில் முன்னி லைப்படுத்தி வரும் நிலையில், தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதில் ரங்கசாமி உறுதியாக இருக்கிறார். இதனால் கூட்டணியில் இழுபறி நீடித்தது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் ஆன்மிகப் பயணம் சென்ற ரங்கசாமி நேற்று புதுவைக்கு திரும்பினார். தொடர்ந்து நேற்று காலை பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

இதுபற்றி இரு கட்சி வட்டாரங் களிலும் விசாரித்தபோது, “பாஜக மேலிடம் அளித்த வாக்குறுதிகளை ரங்கசாமியிடம் சாமிநாதன் தெரிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை முன்னிறுத்த பாஜக தலைமை ஒப்புதல் தந்துள்ளதாகவும், கூடுதலான தொகுதிகளை பாஜகவுக்குதரவும் கட்சித்தலைமை விரும் புவதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்து முடிவு தெரிவிப்பதாக ரங்கசாமி குறிப்பிட்டுள்ளார்” என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்றிரவு தனியார் ஹோட்டல் ஒன்றில், தனது கட்சியின் முக்கிய நிர்வாகி களுடன் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.

இதில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ரங்கசாமியின் நண்பரும் அதிமுக எம்.பி யுமான கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே, காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் என்.ஆர்.காங்கிரசில் இன்று ரங்கசாமி முன்னிலையில் இணைகிறார். அதையும் இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் உறுதிப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x