Published : 03 Mar 2021 03:26 AM
Last Updated : 03 Mar 2021 03:26 AM

அச்சக உரிமையாளர்களுக்கான தேர்தல் விதிமுறைகள் என்னென்ன? - மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்

சட்டமன்ற பொதுத் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது குறித்து அச்சக உரிமையாளர்கள் மற்றும் பதிப்பகத்தினர் ஆகியோருடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்ததாவது:

தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள், துண்டு பிரசுரம் மற்றும்தேர்தல் தொடர்பான விளம்பரங் களை அச்சக உரிமையாளர்கள் அச்சிட்டு பிரசுரம் செய்யும் போது கண்டிப்பாக அச்சக உரிமை யாளரின் பெயர் மற்றும் முகவரி மற்றும் பதிப்பகத்தார் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை சுவ ரொட்டி, துண்டு பிரசுரத்தின் முன் பக்கத்தில் படிக்கும் வகையில் தெளிவாக அச்சடிக்க வேண்டும்.

எந்த ஒரு அச்சக உரிமையா ளரும் தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள், துண்டு பிரசுரம்அச்சிடுவதற்கு முன்பு பதிப்பகத் தாரிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே அச்சக உரிமையாளர்கள் அச்சு செய்ய வேண்டும். அச்சடித்த மூன்று தினங்களுக்குள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அறிக்கையுடன் அச்ச கத்தாரின் உறுதி மொழி அறிக்கை, அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரம் நான்கு எண்ணிக்கையில் இணைக் கப்பட வேண்டும்.

மேலும் அச்சிடப்பட்ட சுவ ரொட்டி, துண்டு பிரசுரத்தின் எண்ணிக்கை மற்றும் மொத்தச் செலவுஆகியவற்றை சரியாகக் குறிப் பிட வேண்டும். ஒவ்வொரு வகையான சுவரொட்டி, துண்டு பிரசுரத்திற்கு தனித்தனியே அச்சக உரிமையாளர்கள் அறிக்கை அளிக்க வேண்டும். அச்சிடப்பட்ட ஒரு சுவரொட்டி, துண்டு பிரசுரத் தினை மறுமுறை அச்சிடப்பட்டால் மேற்கண்ட முறையினைப் பின்பற்றி அறிக்கை அளிக்க வேண்டும்.மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் உரிய அறிக்கை அனுப்பாத அச்சக உரிமையாளர் மற்றும் பதிப் பகத்தார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விதிமுறைகள் மீறப்பட்டது உறுதி செய்யப்பட்டால் உடனடி யாக அச்சகத்தின் உரிமம் ரத்துசெய்யப்படும். தொடர்ந்து உரியசட்ட நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் உள்ள தகவல் பலகையில் அச்சக உரிமையாளரால் வழங்கப்பட்ட சுவரொட்டி, துண்டு பிரசுரம்ஒட்டப்படும்.

மேலும் அச்சக உரிமையாளரால் வழங்கப்பட்டுள்ள படிவம் தேர்தல் பார்வையாளருக்கு தேர்தல் செலவினத்தில் சேர்த் துக் கொள்வதற்காக அனுப் பப்படும். விதிமுறைகளின் படிசட்டமன்ற பொது தேர்தல் நேர்மையாகவும், சுமூகமாகவும் நடை பெற மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

இதேபோல் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அச்சக உரிமையாளர்களுடன் கூட்டங்கள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x