Published : 03 Mar 2021 03:26 AM
Last Updated : 03 Mar 2021 03:26 AM

தமிழக சட்டப்பேரவையில் 31 ஆயிரம் கேள்விகளை எழுப்பிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ: சபாநாயகர் தனபால் பாராட்டு

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு

கள்ளக்குறிச்சி

கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டபேரவை கூட்டத் தொடர்களில் பங்கேற்று அதிகபட்சமாக 30,972கேள்விகளை எழுப்பி சாதனை படைத்த கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் பிரபுவை சட்டப்பேரவை தலைவர் தனபால் பாராட்டியுள்ளார்.

கடந்த 27-ம் தேதியோடு முடிவுற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கடந்த 5 ஆண்டுகால செயல்பாடுகள் குறித்து சட்டப் பேரவைத் தலைவர் தனபால் நினைவு கூர்ந்தார். அப்போது தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் களில் மற்ற உறுப்பினர்களைக் காட்டிலும் கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் பிரபு 30,972 கேள்விகளை எழுப்பியதற்காக அவரை பாராட்டினார்.

இதுதொடர்பாக பிரபு எம்எல்ஏ விடம் கேட்டபோது, “கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து உறுப் பினர்களின் கேள்வி 1 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். அதில் 30,972கோரிக்கைகள் அடங்கிய கேள்வி களை எழுப்பினேன். இதில் பெரும்பாலானவை அரசு செய்து கொடுத்துள்ளது. முதன்மையான கோரிக் கைகளான கள்ளக்குறிச்சி மாவட் டக் கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தேன். அந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றியது.

மாவட்ட பிரிப்பு என்பது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து தான் தொடங்கியது. அதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரி, தியாகதுருகம் தீயணைப்பு நிலையம், வி.கூட்டுரோடு அருகே அமைக்கப்பட்ட தேசிய கால்நடை பூங்கா, கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டிடம் உள்ளிட்ட முதன்மை யான கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டதோடு, குடிமராமத்து மூலம் 200-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் பெரும் பாலானவற்றை நிறைவேற்றித் தந்துள்ளேன். மாவட்ட மக்களின் கோரிக்கையாக நான் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்த அரசுக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன்.

இந்த முறையும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டுள்ளேன். மீண்டும் கட்சி வாய்ப்புவழங்கும்பட்சத்தில் எஞ்சிய கோரிக்கைகளையும் நிறை வேற்றுவதோடு மாநிலத்திலேயே முன்மாதிரியான மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்க பாடுபடுவேன்” என் றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x