

வெள்ள நிவாரணப் பணிகள் எதுவுமே சரியாக நடைபெற வில்லை. இதனால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரி வித்தார்.
கோவையில் நடைபெறும் பாட் டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த ராம தாஸ், விமான நிலையத்தில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு செயல்படு கிறதா என்பதில் சந்தேகம் நிலவு கிறது. சென்னை, கடலூர் ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள நிவாரணப் பணிகள் எதுவுமே சரியாக நடைபெறவில்லை என மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
ஆளும் ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது கவலையில்லை. ஊழல் செய்வதில் கவனமாக இருக்கி றார்கள். வரும் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக அனைத்து இயக்கங்களும் ஓரணியில் திரள வேண்டும்.
கடுமையான விலைவாசி உயர் வுக்கு இடையே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி இருப்பது கண் டிக்கத்தக்கது. விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கோவை அவிநாசி லிங்கம் மகளிர் பல்கலைக்கழ கத்தை சுயநிதி பல்கலைக்கழகமாக மாற்றக்கூடாது என்பதை வலியு றுத்தி போராடி வரும் பேராசிரி யைகள், மாணவிகள், பெற்றோர் ஆகியோருக்கு பாமக துணை நிற்கும். இவ்வாறு அவர் தெரி வித்தார். பேட்டியின்போது, அக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, நிர்வாகிகள் உடன் இருந்தனர்.