பால் பாக்கெட்டில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகம்

பால் பாக்கெட்டில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகம்
Updated on
1 min read

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை வலியு றுத்தி, ஸ்வீப் அமைப்பு மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடங்கப்பட் டுள்ளன. அதன்படி, காரைக்கால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மற்றும் ஸ்வீப் அமைப்பின் சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் விற் பனையை, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் அர்ஜூன் சர்மா தொடங்கி வைத்தார்.

பின்னர், ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:

காரைக்காலில் ஸ்வீப் அமைப்பு மூலம் 100 சதவீத வாக்குப் பதிவை வலியு றுத்தி பேரணி, கையெழுத்து இயக்கம், குறுந்தகவல் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாள்தோறும் 30 ஆயிரம் பால் பாக்கெட்டு கள் விற்பனைக்கு செல்கின்றன. இவற்றில் அச்சிடப்பட்டுள்ள விழிப்புணர்வு வாசகங்கள், வாக்காளர்களை நிச்சயம் சென்றடையும் என நம்புகிறோம்.

காரைக்கால் மாவட்டத்தில் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லைப் பகு தியில் உள்ள 9 சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அதிகப்படுத்தப்பட்டுள் ளன. அதன்படி, மாவட்டத்தில் 71 வாக்குச்சாவடிகள் அதி கரிக்கப்பட்டுள்ளன என்றார்.

மாவட்ட துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், பால் உற்பத்தி யாளர் ஒன்றிய நிர்வாகி எம்.குமாரசாமி, ஸ்வீப் அலுவலர் ஜே.ஷெர்லி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in