Published : 03 Mar 2021 03:29 AM
Last Updated : 03 Mar 2021 03:29 AM

அகலப் பாதை பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே 3-வது அகல ரயில் பாதை பணிகள் நடைபெற இருப்பதால், ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வரும் 19-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் வண்டி எண் 02634 கன்னியாகுமரி - சென்னை அதிவிரைவு சிறப்பு ரயில் செங்கல்பட்டு - சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் அன்று குருவாயூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 06128 குருவாயூர்- சென்னை சிறப்பு ரயில் விழுப்புரம் - சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வரும் 19, 20-ம் தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வண்டி எண் 02632 நெல்லை- சென்னை சிறப்பு ரயில், வரும் 20-ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் வண்டி எண் 02693 சென்னை - தூத்துக்குடி முத்துநகர் சிறப்பு ரயில், வண்டி எண் 06723 சென்னை - கொல்லம் அனந்தபுரி சிறப்பு ரயில் ஆகியவை சென்னை - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வரும் 21-ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06105 சென்னை - திருச்செந்தூர் சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06851 சென்னை - ராமேசுவரம் சிறப்பு ரயில், வரும் 20, 21-ம்தேதிகளில் சென்னையிலிருந்து புறப்படும் வண்டி எண் 02661 சென்னை - செங்கோட்டை பொதிகை சிறப்பு ரயில் ஆகியவை சென்னை - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. வரும் 20ம் தேதி தூத்துக்குடி, கொல்லம் மற்றும் திருச்செந்தூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 02694 தூத்துக்குடி - சென்னை முத்துநகர் சிறப்பு ரயில், வண்டி எண் 06724 கொல்லம் - சென்னை அனந்தபுரி சிறப்பு ரயில், வண்டி எண் 06106 திருச்செந்தூர் - சென்னை செந்தூர் சிறப்பு ரயில் ஆகியவை வழக்கமான தாம்பரம், மாம்பலம் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக காஞ்சிபுரம், திருத்தணி வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x